வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

நாட்டை பிளவுபடுத்திய கருணாஅம்மான் தற்போது சொகுசு வாழ்க்கை வாழும் போது முன்னாள் இராணுவத் தளபதியின் நிலையோ பரிதாபம் -தம்பர அமிலதேரர்

யுத்தக் காலத்தில் தயா மாஸ்டரை கொழும்புக்கு கொண்டு வந்து சிகிச்சையளிக்க அரசாங்கம் அனுமதியளித்தது. ஆனால் யுத்தத்தையே வெற்றிக் கொண்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சையளிக்க அனுமதியளிக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த தம்பர அமிலதேரர் தெரிவித்துள்ளார்
. ஜனநாயக தேசிய கூட்டணியின் ஊடவியளாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள ஜனநாயக தேசிய கூட்டணியின் தலமையலுவலகத்தில் நடைப்பெற்ற போதே தம்பர அமிலதேரர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து கருத்து தெரிவித்த தேரர், நாட்டை பிளவுபடுத்திய கருணாஅம்மான் தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் வெற்றியை பெற்றுக் கொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தற்போது சிறையில் அடைக்கப்பட்டு பல துன்பங்களை எதிர்நோக்குகின்றார். இங்கு எது ஜனநாயகம்? எது நீதி? என கேள்வி எழுப்பியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’