வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கோத்தாபய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோத்தாபய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 டிசம்பர், 2010

கப்பம் கோரினால் உடனடியாக அறியத்தாருங்கள் - பாதுகாப்புச் செயலாளர்

ப்பம் கோரி யாராவது அச்சுறுத்தினால் உடனடியாக தமது கவனத்திற்குக் கொண்டுவருமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 7 மே, 2010

வடபகுதி மக்கள் மனங்களை வெல்வது எமது பாரிய பொறுப்பு: முப்படைகளின் பங்களிப்புடன் மக்கள் நலன் பேண நடவடிக்கை

கிளிநொச்சியை வென்றது போன்று மக்கள் மனங்களை வெல்வதும் எமது பாரிய பொறுப்பாகும். முப்படை யினரின் பங்களிப்புடன் வடபகுதி மக்களின் நலன்களை பேண பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

இராணுவ பதவிகளின் அந்தஸ்தை தவறாக பயன்படுத்தியதாலேயே பொன்சேகா கைது - பாதுகாப்புச் செயலர்


அரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகாரபூர்வ பதவிகளின் அந்தஸ்தை பயன்படுத்தியமை காரணமாகவே ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலில் தலையிடாமை மற்றும் பங்கேற்காமை காரணமாக இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு ஆசியாவில் பொறுப்புள்ள படையினர் என்ற நல்ல மதிப்பு உள்ளது. எனினும் பொன்சேகா அவரது சேவைக்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெற்றுக் கொள்ளும் நோக்கில் இராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் பிரதானி ஆகிய பதவி அந்தஸ்தை சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளிடம் செல்வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளதுடன் ஒரு சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இராணுவத் தளபதியின் அதிகாரப்பூர்வ வாசஸ்தலத்தையும் பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறான அவரது தவறான நடத்தை மற்றும் இராணுவ ஒழுங்கினை மீறியமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் சேவையில் இருக்கும் போது எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற கருத்தை இளம் இராணுவ வீரர்களிடமும் ஏனைய நிலைகளில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடக்கூடும் இதனால் தான் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.

சரத் பொன்சேகா அவரது அதிகார பூர்வ இராணுவ பதவிகளின் அந்தஸ்தையும் இராணுவ வளங்களையும் அவரது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியமைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

சனி, 13 பிப்ரவரி, 2010

டிவி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவத்தினருக்குத் தடை


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவ அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவர்களை தங்களது நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என சகல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில் இராணுவ அதிகாரிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதானது இராணுவ சட்ட விதிமுறைகளுக்கு முரணானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இராணுவ அதிகாரிகளை இணைத்துக் கொள்வதை உரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதானது இராணுவ சட்டத்தை மீறும் செயலாகும்.

ஆளுமையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் என எந்தவொரு நிகழ்ச்சியிலும் இராணுவ அதிகாரிகள் பங்குபற்றுவதானது இராணுவ சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும்.

இதனையும் மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் பிரகாரம் தகுந்த தண்டனைகளை வழங்க இடமுண்டு என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவே கைச்சாத்திட்டுள்ளார்.

அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 22 டிசம்பர், 2009

ராஜபக்ஷ குடும்பத்தினர் நேர்மையானவர்கள்: பாதுகாப்புச் செயலாளர்


சரத் பொன்சேகா தமக்கு கிடைத்ததை வைத்து திருப்தி அடையும் மனநிலைக் கொண்டவர் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமக்கு ஏற்பட்டுள்ள அதிகார பசியின் காரணமாகவே அவர் தேர்தலில் களமிறங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் அவருக்கு அனைத்து கொடுப்பனவுகளையும் வழங்கியதுடன், சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான காணியினையும் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவற்றைக் கொண்டு சரத் பொன்சேகா திருபத்தி அடையவில்லை என கோத்தாபய தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது குடும்பம் பணத்துக்கு பின்னால் செல்வதாக சரத் பொன்சேகா போலியாக குற்றம் சுமத்தி வருவதாகவும், தமது குடும்பம் அவ்வாறு செல்லவில்லை எனவும், மக்களின நன்மதிப்பை பெறுவதையே தமது குடும்பம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.