கப்பம் கோரி யாராவது அச்சுறுத்தினால் உடனடியாக தமது கவனத்திற்குக் கொண்டுவருமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
 
அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவரது சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளனர்.
இராணுவத்திற்கு நிதி சேகரிக்கும் ‘அபிவெனுவென் அபி’ திட்டத்திற்கு 2 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக அவர்கள் வழங்கியுள்ளனர்.
இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கப்பம் கோரி அச்சுறுத்துபவர்கள் குறித்து உடனடியாக அறியத்தந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’