வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 பிப்ரவரி, 2010

டிவி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவத்தினருக்குத் தடை


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவ அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவர்களை தங்களது நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என சகல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில் இராணுவ அதிகாரிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதானது இராணுவ சட்ட விதிமுறைகளுக்கு முரணானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இராணுவ அதிகாரிகளை இணைத்துக் கொள்வதை உரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதானது இராணுவ சட்டத்தை மீறும் செயலாகும்.

ஆளுமையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் என எந்தவொரு நிகழ்ச்சியிலும் இராணுவ அதிகாரிகள் பங்குபற்றுவதானது இராணுவ சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும்.

இதனையும் மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் பிரகாரம் தகுந்த தண்டனைகளை வழங்க இடமுண்டு என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவே கைச்சாத்திட்டுள்ளார்.

அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’