வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கோத்தபாய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோத்தபாய ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜனவரி, 2012

இராணுவ மயமாக்கல் எனும் சர்வதேச குற்றச்சாட்டுகள் பொய்: கோத்தபாய ராஜபக்ஷ


டக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம்கள் யுத்த நிறைவின் பின்னர் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இலங்கை முகங்கொடுக்கும் தேசிய பாதுகாப்புக்கான சவால்கள் எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கொன்று நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 23 மார்ச், 2010

தொலைநோக்கற்ற எதிர்க்கட்சியொன்றே தற்போது நாட்டில் காணப்படுகிறது : கோத்தபாய





தொலைநோக்கற்ற எதிர்க்கட்சியொன்றே தற்போது நாட்டில் காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பலவீனமான தொலைநோக்கற்ற எதிர்க்கட்சிகள் காணப்படும் இந்த நாட்டில், ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு வலுவான ஓர் அரசாங்கத்தின் ஆட்சி இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 15 மார்ச், 2010

பயங்கரவாதத்தை போன்றே ஊழலை ஒழிக்கவும் ஒத்துழைப்பு வழங்கப்படும் : கோதபாய


பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளின் போது ஒத்துழைப்பு வழங்கியதனைப் போன்றே, ஊழல் மோசடிகளை ஒழிக்கவும் பூரண ஆதரவு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

யுத்தத்தின் இறுதி நாள் மே 18 ல் நடந்ததை விவரிக்கிறார் கோத்தபாய


இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்பும் சில மேற்குல நாடுகள் யுத்தக் குற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றன என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
"தெஹல்கா' இணையத்தளத்திற்கு அளித்துள்ள ஒரு நீண்ட பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள கோத்தபாய, ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு காட்டமான பதில்களை வழங்கியுள்ளார்.

இந்தப் பேட்டியின் இறுதியில் இறுதி யுத்தம் குறித்த ஒரு கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது. சரத்பொன்சேகாவை சம்பந்தப்படுத்தி கோத்தபாயவிடம் எழுப்பப்பட்ட கேள்வி இது தான்:

கேள்வி: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்களை நீங்கள் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டீர்கள் எனச் சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

பதில்: முன்னர் அவர் வேறு எதையோ தெரிவித்திருந்தார். தற்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். அரசியல் தீர்வு குறித்துப் பேசுகிறார். சரணடைய வந்தவர்களைச் சுடுமாறு நானே உத்தர விட்டேன் என்கிறார். அவரது பழைய பாடசாலையில் ஆற்றிய உரையில் விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு கேட்டதன் மூலம் அரசியல் தலைமை அவர்களைப் பாதுகாக்க முயன்றதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். யுத்த நிலைமையில் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றார்.

கேள்வி: உண்மையில் என்ன நடந்தது?

பதில்: பிரபாகரன் கொல்லப்பட்ட மே 18ல் நடந்தது இதுதான்.

மிகச் சிறிய பகுதிக்குள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இவர்களில் 200 பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

நள்ளிரவிற்குப் பின்னர் இது இடம்பெற்றது. இந்தச் சூழ்நிலையை மனதில் கற்பனை செய்து பாருங்கள்.

கடும் இருட்டில் அடர்ந்த காடுகளுக்குள் இருந்து அவர்கள் வருகின்றனர். சில விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர். பிரபாகரன் சுற்றி வளைப்பை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றார். அவரது மகன் வேறு திசையில் சென்றார்.

அதேவேளை, சரணடைந்த 10 ஆயிரம் உறுப்பினர்கள் வேறு திசையிலிருந்து வந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், இளம் இராணுவ வீரர் ஒருவரால் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரை இனங் கண்டு அவரைச் சுட்டுக்கொல்லும் அல்லது உயிருடன் விடும் முடிவை எவ்வாறு எடுக்க முடியும்?

இவ்வாறு கோத்தபாய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

பொன்சேகாவுக்கு உதவியதாக கோத்தபாய சுமத்திய குற்றச்சாட்டை, அமெரிக்காவும் நோர்வேயும் கடும் தொனியில் மறுத்துள்ளன


இலங்கையில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவின் பிரசாரங்களுக்கு நிதியளித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நோர்வேயும் அமெரிக்காவும் மறுத்துள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தக்குற்றச்சாட்டை சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஸ்ரெயிட் டைம்ஸ் செய்திதாளுக்கு இன்று வழங்கிய செவ்வியில் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நோர்வே, ஏனைய நாடுகளின் தேர்தல்களிலும் ஜனநாயகத்திலும் தமது நாடு தலையிடாது என தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நோர்வேயின் தூதுவர் டோர் ஹட்ரம் இன்று வெளியுறவுத்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதேவேளை கோத்தபாயவின் குற்றச்சாட்டை அமெரிக்க தூதரகம் கடுமையான தொனியில் மறுத்துள்ளது.

எனினும் கோத்தபாயவின் குற்றச்சாட்டில் எவ்வித உண்மைகளும் இல்லை என அந்த தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கம், எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களின் பாதுகாப்பையும் ஊடகங்களின் சுதந்திரத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

சுதந்திரமாக கருத்து தெரிவித்தல், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பனவற்றில் அனைத்து இலங்கையர்களும் சந்தோசமாக ஈடுபடுவது ஜனநாயக உரிமை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்காவுக்கு எதிராக பொன்சேகா போர்க்குற்றங்களை சுமத்திய நடவடிக்கைக்கு பின்னணியில் மேற்குலகின் மிகப்பெரிய சதி உள்ளது. பொன்சேகாவின் இந்த பிரசாரங்களுக்கு அமெரிக்கா, நோர்வே போன்ற‌ நாடுகள் பெருமளவு நிதியை வழங்கியுள்ளன. அது எமக்கு நம்பகரமாக தெரியவந்துள்ளது. அரசுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்வதற்கு ஊடகவியலாளர் ஒருவருக்கு நோர்வே நிதி வழங்கியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

சிங்கப்பூர் ஊடகமான ஸ்ரெய்ட் ரைம்ஸிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் மேற்கண்டவாறு குற்றச்சாட்டியிருந்தார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சனி, 19 டிசம்பர், 2009

1பில்லியன் ரூபா நட்டஈட்டை சண்டேலீடருக்கு எதிராக கோரும் பாதுகாப்பு அமைச்சர்!


சண்டே லீடர் பத்திரிகையில் தமக்கு எதிராக பிரசுரமான இரண்டு கட்டுரைகளுக்காக ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டஆலோசகர் சனாத் விஜேரத்ன சண்டே லீடர் பத்திரிகையின் தலைவர் லால் விக்கிரமதுங்கவிற்கு அனுப்பியுள்ளார். தமக்கு எதிரான குறித்த இரண்டு கட்டுரைகளும் இந்தமாதம் 6மற்றும் 12ம் திகதிகளில் பிரசுரமானதாக அந்த கடிதத்தில் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக் காட்டியுள்ளார். ஏற்கனவே இவ்வாறான கட்டுரைகளை வெளியிடுவதற்காக கல்கிஸ்ஸை நீதிமன்றம் சண்டே லீடர் பத்திரிகைக்கு தடை விதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்றின் உத்தரவை சண்டே லீடர் பத்திரிகை ஏற்றுக்கொண்ட போதும் குறித்த இரண்டு கட்டுரைகளையும் வெளியிட்டதன் அடிப்படையில் நீதிமன்றின் உத்தரவை மீறியுள்ளதாக சட்ட ஆலோசகர் சுட்டிக் காட்டியுள்ளார்.

புதன், 9 டிசம்பர், 2009

பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரச உயர்மட்ட குழு இந்தியா விஜயம்!


பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கின் வசந்தம் செயலணிக்குழுவின் தலைவருமான பஷில் ராஜபக்ஷ ஆகியோரடங்கிய உயர்மட்ட குழுவினர் இந்தியாவிற்கான இரண்டு நாள் உத்தியோகப+ர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் வியாழக்கிழமை இந்தியா பயணமாகவுள்ளனர்.

வியாழக்கிழமை புதுடில்லியை சென்றடையும் உயர்மட்ட இலங்கை அரசின் உயர் குழுவினர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாரயணன், வெளியுறவு செயலர் நிருபாமா ராவ், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார் ஆகியோர் உட்பட மேலும் சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு நடாத்துவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது

சனி, 5 டிசம்பர், 2009

கொழும்பு அப்பல்லோ மருத்துவமனையை வாங்கி விட்டாரா கோத்தபயா?


கொழும்பு: கொழும்பில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை யை மறைமுகமாக கோத்தபயா ராஜபக்சே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி மருத்துவமனைக் குழுமம் அப்பல்லோ. இது இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு கிளை அமைத்திருந்தது. இலங்கை இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த மருத்துவமனையை அப்பல்லோ மருத்துவமனையை நடத்தி வந்தது அப்பல்லோ.

இந்த நிலையில் தற்போது இந்த மருத்துவமனையின் பெயர் லங்கா ஹாஸ்பிடல்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த மருத்துவமனையின் தலைவராக கோத்தபயா ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த மருத்துவமனையை கோத்தபயா ராஜபக்சே வாங்கி விட்டதாக பேச்சு எழுந்துள்ளது.

ஆகஸ்ட் 14ம் தேதி லங்கா ஹாஸ்பிடல்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் என்ற பெயரில் மாற்றப்பட்ட அப்பல்லோவின் இயக்குநர் குழுவில் கோத்தபயா சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே இருந்த இயக்குநர் குழு கலைக்கப்பட்டு கோத்தபயா தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லங்கா ஹாஸ்பிடல்ஸ் என்று மாற்றப்பட்டுள்ள அப்பல்லோவில் 86 சதவீத பங்குகளை இலங்கை இன்சூரன்ஸ் நிறுவனம் வைத்துள்ளதாம்.

இதுகுறித்து லங்கா ஹாஸ்பிடல்ஸ் தரப்பில் கூறுகையில், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு நவம்பர் 16 ஆம் தேதியுடன் காலாவாதியானது.

இதையடுத்து அப்பல்லோ என்ற பெயரில் இருந்த தனியார் மருத்துவமனையானது அரசு கட்டுப்பாட்டில் வரவேண்டும் என உச்சநீதிமன்றம் பணித்துள்ளதையடுத்தே அதன் பெயர் லங்கா ஹாஸ்பிடல்ஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கோத்தபய ராஜபக்சேவை உள்ளடக்கி புதிய இயக்குநர் குழு உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படடுள்ளது.

ஆனால் கோத்தபயா இந்த மருத்துவமனையை வாங்கி விட்டதாகவே இலங்கையில் பேச்சு அடிபடுகிறது.

ஏற்கனவே பல தனியார் நிறுவனங்களை கோத்தபயா உள்ளிட்ட ராஜபக்சே சகோதரர்கள் சரமாரியாக வாங்கி வருவதாக சர்ச்சை உள்ள நிலையி்ல தற்போது இந்த வரிசையில் அப்பல்லோவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 3 டிசம்பர், 2009

முன்னாள் புலி உறுப்பினர்களுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திப்பு


புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவும் நாளை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அரசாங்கத்தின் செலவில் ரத்மலானை இந்துக்கல்லூரியில் முன்னாள் சிறுவர் போராளிகள் கல்வி கற்று வருகின்றனர். அவர்களின் நலன் குறித்தே பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

தம்மை அவதூறு எழுதிய சண்டேலீடர் ஒருமில்லியன் ரூபா தரவேண்டும் -கோத்தபாய ராஜபக்ஷ


பாதுகாப்புச் செயலாளரை தாக்கிக் கட்டுரை எழுதிய சண்டே லீடர் பத்திரிகை தம்மை அவதூறு செய்து விட்டதாக தெரிவித்து கோத்தபாய ராஜபக்ஷ தமக்கு 1மில்லியன் ரூபாவும் மன்னிப்புக் கடிதமும் கேட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 22ம் திகதி சண்டேலீடர் ஆசிரியர்களான பிரெட்ரிக்கா ஜான்ஸ் மற்றும் முன்ஸா முஸ்டக் ஆகியோருக்கு சிவப்பு மையினால் எழுதப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் தபாலில் அவர்கள் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் அவர்கள் இருவரும் எழுதுவதை நிறுத்த வேண்டும் இல்லையேல் சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் நிலமையே தான் நடக்கும் என மிரட்டப்பட்டிருந்தது அக்கடிதங்களிலிருந்த கையெழுத்தானது லசந்த விக்கிரமதுங்கே படுகொலை செய்யப்பட்ட போது அனுப்பப்பட்ட மிரட்டல் கடித்திலிருந்த எழுத்துடன் ஒத்துப் போவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒக்டோபர் 29ம் திகதி சண்டேலீடருக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் வக்கீல்கள் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் பாதுகாப்புச் செயலாளரின் பெயரை சண்டேலீடர் கட்டுரைகள் அவதூறு செய்து விட்டதால் அவருக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபா அபராதம் செலுத்துவதோடு கோத்தபாய ராஜபக்ஷவின் பெயரை சீரழிப்பதற்கு மன்னிப்பு கடிதம் எழுதி கையெழுத்திட்டு தராவிட்டால் மேலதிக சட்டநடவடிக்கை எடுப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.