வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம்கள் யுத்த நிறைவின் பின்னர் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இலங்கை முகங்கொடுக்கும் தேசிய பாதுகாப்புக்கான சவால்கள் எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கொன்று நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இராணுவத்தினரை நிலை நிறுத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உள்ளது. மக்களின் நன்மைக்காக இவ்வாறு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் இராணுவத்தினரை நிலை நிறுத்துவது குறித்து உலகின் வேறு எந்தத் தரப்புக்கும் கருத்து வெளியிடும் உரிமையோ அதிகாரமோ கிடையாது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’