வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 ஜனவரி, 2012

ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க பல்கலை மாணவர்கள் குழுவொன்று முயற்சி: எஸ்.பி


தெற்கிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று, எல்.ரி.ரி.ஈ.யுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கு முயற்சிப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இம்மாணவர்கள் குழுவினர் ஜே.வி.பியிலிருந்து பிரிந்த குழுவினருடன் அரசியல் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். "எல்.ரி.ரி.ஈ.யுடன் இருந்தவர்களை தேடுவதற்காக இம்மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். அவர்கள் ஆயுதப் போராட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கு நாம் அனுமதிக்க முடியாது" என அவர் கூறினார். யாழ் பல்கலைக்கழகத்திற்கு இம்முறை 573 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதகாவும் மாணவர்களின் தங்குமிடப் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். உ.த. பரீட்சையின் இஸட் புள்ளி அடிப்படையிலேயே சிங்கள மாணவர்கள் யாழ் பல்கலைக்கழத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது வடக்கில் பலவந்தமாக சிங்கள குடியேற்றங்களை ஆரம்பிப்பதற்கான முயற்சியல்ல. பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் இன, மத அடையாளங்களின் அடிப்படையில் செயற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’