வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 19 டிசம்பர், 2009

1பில்லியன் ரூபா நட்டஈட்டை சண்டேலீடருக்கு எதிராக கோரும் பாதுகாப்பு அமைச்சர்!


சண்டே லீடர் பத்திரிகையில் தமக்கு எதிராக பிரசுரமான இரண்டு கட்டுரைகளுக்காக ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டஆலோசகர் சனாத் விஜேரத்ன சண்டே லீடர் பத்திரிகையின் தலைவர் லால் விக்கிரமதுங்கவிற்கு அனுப்பியுள்ளார். தமக்கு எதிரான குறித்த இரண்டு கட்டுரைகளும் இந்தமாதம் 6மற்றும் 12ம் திகதிகளில் பிரசுரமானதாக அந்த கடிதத்தில் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக் காட்டியுள்ளார். ஏற்கனவே இவ்வாறான கட்டுரைகளை வெளியிடுவதற்காக கல்கிஸ்ஸை நீதிமன்றம் சண்டே லீடர் பத்திரிகைக்கு தடை விதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்றின் உத்தரவை சண்டே லீடர் பத்திரிகை ஏற்றுக்கொண்ட போதும் குறித்த இரண்டு கட்டுரைகளையும் வெளியிட்டதன் அடிப்படையில் நீதிமன்றின் உத்தரவை மீறியுள்ளதாக சட்ட ஆலோசகர் சுட்டிக் காட்டியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’