வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 மார்ச், 2013

ஏனைய சமூகத்தினர் ஹலால் பொருட்களை நுகர்வது அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்பை பொறுத்தது: நிமல்



லால் நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்வது என்பது முஸ்லிம் சமூகத்திற்கு உள்ள பிரச்சினை. ஆனால் ஏனைய சமூகத்தினர் ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை நுகர்வது அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. எனவே, எவரும் ஏனைய சமூகங்களின் சம்பிரதாயங்களை தகர்க்கும் வகையில் செயற்பட முயல்வது நல்தல்ல என்று நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

வியாழன், 10 ஜனவரி, 2013

பிரதம நீதியரசருக்கு எதிரான யோசனை சபையில் முன்வைப்பு


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு நடத்திய விசாரணையின் போது அவர் குற்றவாளியெனக் காணப்பட்டுள்ளார் எனவும் அவரை பதவி நீக்கும் யோசனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்படும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சற்று நேரத்துக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது.

புதன், 23 மே, 2012

எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக 3 மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படும்



மிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக அநுராதபுரம், வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் ஒரு மாதகாலத்திற்குள் மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் நிமல் நாடாளுமன்றத்தில் இன்று இத்தகவலை தெரிவித்தார்.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

சிவில் நிர்வாகத்திலிருந்து படையினர் விலகிக்கொள்வர்: அமைச்சர் நிமல்


மூக வாழ்வின் சகல அம்சங்களிலிருந்து பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெறப்படுவர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு


ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

உயர் பாதுகாப்புவலய காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள பகுதிகளிலுள்ள காணிகளை இயன்றவரை விரைவாக அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது..

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி தயார் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

ட பகுதியில் மீள் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் தீர்வு ஒன்றையும் அரசாங்கம் வழங்குமென்று நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்

ஞாயிறு, 2 மே, 2010

ஆளும் கட்சி நாடாளுமன்ற குழு தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை அரசாங்கம் நியமித்துள்ளது.
அத்துடன் ஆளும் கட்சியின் பிரதம கொறோடாவாக அமைச்சர் டினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

செவ்வாய், 3 நவம்பர், 2009

தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் : அமைச்சர் சிறிபால டி சில்வா


இருண்ட காலம் முடிவடைந்துவிட்டது. வடக்கிற்கு இப்போது வசந்தம் வந்துள்ளது. பல அபிவிருத்திப் பணிகள், உட்கட்டமைப்புப் பணிகள், மனித மேம்பாட்டு நடவடிக்கைகள் என்பன நடைபெறுகின்றன. ஜனாதிபதி அவர்கள் வெறும் அபிவிருத்தியை மட்டும் பாராமல் ஒரு தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அவரது கரங்களை அனைவரும் பலப்படுத்த முன்வர வேண்டும்" என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

வவுனியா பொது மருத்துவமனையில் மருத்துவ விடுதி, மார்பு சிகிச்சை நிலையம் என்பவற்றைத் திறந்து வைத்த பின்னர், குடும்ப நல பயிற்சி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

வவுனியா தாதியர் கல்லூரியின் பயிற்சி மண்டபத்தில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரனின் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான ரீ.சித்தார்த்தன், யுனிசெவ் நிறுவனத்தின் சுகாதாரம் மற்றும் போஷாக்குப் பிரிவு அதிகாரி டாக்டர் மோஸிம் ஹுஸைன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.மகேந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவிக்கையில்,

"மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே வைத்தியசாலைக்கான விடுதிகள், சிகிச்சை நிலையங்கள், தாதியர் பயிற்சிக் கல்லூரி என்பன அமைக்கப்படுகின்றன. இவற்றின் ஊடாகப் பொதுமக்களின் வாழ்க்கையைக் கட்டி எழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் இனமத, மொழி, மாகாணம், பிரதேசம் போன்ற எந்த வேறுபாடுகளுமின்றி, ஐக்கியப்பட்டு, ஒன்றிணைந்து செயற்படத்தக்க பக்குவத்தை அவர்களது மனதில் ஏற்படுத்த வேண்டியுள்ளது. எந்த ஒரு அபிவிருத்திப் பணியும் ஒன்றிணைந்த மக்கள் வாழ்க்கையையும் செயற்பாட்டையும் முன்னோக்கியதாக அமைய வேண்டும் என்பதுதான் மகிந்த சிந்தனையின் அடிப்படையாகும்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமமான சுகாதார சேவைகள், சமமான கல்வி வாய்ப்புக்கள், சமமான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே மகிந்த சிந்தனையின் இலக்காகும்.

நாங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வைத்தியர்கள், தாதியர்கள், வைத்திய ஊழியர்களைக் கொண்டு வரவேண்டியதில்லை. அந்தந்த மாவட்டங்களிலேயே இவர்களை உருவாக்க வேண்டும். வவுனியா, செட்டிக் குளம், மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் தமிழ் வைத்தியர்கள் பணிபுரிய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் அவ்வாறு தமிழ் வைத்தியர்கள் இங்கு வந்து பணிபுரிவதற்குத் தயாராக இல்லை.

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுபவர்களில் 99 சதவீதமானவர்கள் தமிழ் பிரதேசங்களில் பணியாற்ற விரும்புகிறார்களில்லை. அவர்கள் கொழும்பில் பணியாற்ற வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இந்த மனப்போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். எனவே தமிழ்ப் பிரதேசங்களில் பணியாற்றுவதற்குத் தமிழ் வைத்தியர்கள் உடனடியாக முன்வர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.