வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 மே, 2012

எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக 3 மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படும்



மிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக அநுராதபுரம், வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் ஒரு மாதகாலத்திற்குள் மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் நிமல் நாடாளுமன்றத்தில் இன்று இத்தகவலை தெரிவித்தார்.
உண்ணாவிரதம் மேற்கொள்ளும் கைதிகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார். அதேவேளை, அக்கைதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறியவாறு அரசியல் கைதிகள் அல்லர் எனவும் அமைச்சர் கூறினார். 'உண்ணாவிரதம் மேற்கொள்ளும் 229 பேரும் அப்போது எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். சிறைச்சாலை அதிகாரிகளால் வழங்கப்படும் உணவை உட்கொள்வதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். ஆனால், அவர்களை பார்க்க வருவோரால் கொண்டுவரப்பட்ட உணவுகளை உட்கொள்வது எமக்குத் தெரியும்' எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். ஏற்கெனவே 359 எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர். 309 பேருக்கு எதிரான விசாரணைகள் நடைபெறுகின்றன என அவர் தெரிவித்தார். சிலர் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக த.தே.கூட்டமைப்பு கூறியதை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். 'அவர்கள் சிறிய எண்ணிக்கையானவர்கள். ஏனைய எல்.ரி.ரி.ஈ.செயற்பாட்டாளர்கள் சிலர் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளாக காணப்பட்ட 359 பேரையும் நீதித்துறை நடைமுறைகளுக்கூடாகவே விடுவிக்க முடியும்' என அவர் கூறினார். 673 எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர். அத்துடன் கடந்த வருடத்திலிருந்த 241 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் எனவும் எனவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’