
அமெரிக்கா உலக நாடுகளுக்கு உதவித் தொகை வழங்கும் நிலைமை மாறி உலக நாடுகள் இணைந்து அமெரிக்காவுக்கு உதவி வழங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியா, சீனா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளே அதிகளவில் உதவிகளை வழங்கிவருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கைக்கான உதவித் தொகையில் 20 வீதத்தை குறைத்துக் கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைக்கான உதவித் தொகையை 20 வீதத்தினால் குறைப்பதாக கூறியுள்ள அமெரிக்கா முதலில் அதன் பெறுமதி என்னவென்று கூறவேண்டியது அவசியமாகும். இதேவேளை, வெளிநாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெறும்போது தேசிய பாதுகாப்பு, இறைமை மற்றும் நாட்டுக்கு கிடைக்கும் பயன் என்பன குறித்து கவனத்திற் கொண்டுவிட்டே கடனைப் பெறுவோம். அவற்றுக்கு பங்கம் ஏற்படும் நிலைமை இருந்தால் பெறமாட்டோம். நாம் நிபந்தனைகளையும் ஏற்கமாட்டோம் என்றார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’