வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 ஏப்ரல், 2013

இலங்கை பிரச்சினையில் தி.மு.க., அ.தி.மு.க.வை போல சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது



லங்கை பிரச்சினையில் திராவிட முன்னேற்ற கழகம் , அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை போன்று சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது என்று கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.
பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் துடியலூரில் நடந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திராவிட பாரம்பரிய வளர்ச்சியை பெரியார், அண்ணாவை விட்டு விட்டு எழுத முடியாது. தி.மு.க தேர்தலில் தோற்றதால் அது அழிவை நோக்கி பயணிக்கிறது எனக்கூற முடியாது. தமிழகத்தின் பெரும்பாலான உள்கட்டமைப்பு வசதிகள் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் செய்யப்பட்டவை என்பதை யாரும் மறுக்க முடியாது. உணர்வுப்பூர்வமான விஷயமான இலங்கை பிரச்சினையில் தி.மு.க. எப்போதும் உறுதியான நிலைபாட்டை கொண்டுள்ளது. அ.தி.மு.க.வை போல சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது.இலங்கை சுதந்திரத்திற்கு வன்முறை தீர்வாகாது என தி.மு.க. பலமுறை வலியுறுத்தியுள்ளது. இப்பிரச்சினை தீர்ப்பதற்கு தி.மு.க. பல போராட்டங்களை நடத்தியுள்ளது. மீனவர் பிரச்சினை, ஈழப்பிரசனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலமுறை நான் பேசியுள்ளேன். தனி நபர் மசோதாக்களை கொண்டு வந்துள்ளேன் நட்பா? உறவா? என்ற இறுதிக்கட்ட போராட்டத்தின் போது தான் அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப்போக செய்ய இந்தியா தான் வலிமையாக முயன்றுள்ளது என்பதை அறிந்த போது அதிர்ச்சியுடன் நாம் ஆதரவை விலக்கிக்கொண்டோம். கேரளாவை சேர்ந்த இரு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இத்தாலியுடன் ராஜதந்திர உறவுகளை துண்டிக்க பிரதமர் தயாரானார். ஆனால் தமிழக மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு அவரிடம் பதிலில்லை. இலங்கை எப்போதும் இந்தியாவை நட்பு நாடாக கருதியதில்லை. அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவிற்கு எதிராகவே இருந்துள்ளது. ஆனால் இந்தியா இதற்கு உதவுகிறது.நட்பு நாடாக இலங்கையை கருதக்கூடாது என தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உண்மையான நோக்க முடையதாக இருப்பின் அதனை தி.மு.க. எப்போதும் ஆதரிக்கும். ஆட்சிக்காகவோ, சுய இலாபத்திற்காகவோ தி.மு.க, கொள்கையில் சமரசம் செய்து கொள்வதில்லை. தனி மாநிலத்தாலோ, தனி மனிதனாலோ தீர்க்கக்கூடிய பிரச்சினையல்ல ஈழம். மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது தான் இன்றைய தேவையாகும் என்றும் அவர் சொன்னார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’