ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதா என எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார்.
'2009 இலிருந்து நாம் சாதித்தவை பலவாயினும் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன' என அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் காங்;கிரஸின் 'புளொக்' ஒன்றில் கூறியிருந்ததை ரணில் விக்ரமசிங்க மேற்கோள்காட்டி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இது போலவே 'எமது கடப்பாடு ஜனநாயகம் மட்டுமன்று அது சட்டத்தின் ஆட்சி மற்றும் இறைமைக்கொள்கை என்பவற்றையும் அடங்கியதாகும்' என தூதுவர் கூறியதையும் ரணில் சுட்டிக்காட்டி இவை தீர்மானத்தில் இலங்கை செய்யவேண்டுமென கூறப்பட்டவற்றை ஏற்பதாக உள்ளது என ரணில் கூறினார். இந்த கொள்கை மாற்றமானது அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை ஏற்பதாக உள்ளது. அமெரிக்கா அல்லது இந்தியாவுடன் இந்த தீர்மானம் பற்றி அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதா? என ரணில் விக்ரமசிங்க கேட்டபோது இலங்கை இந்த தீர்மானத்தை ஏற்காதபடியால் அதுபற்றி பேச்சுக்கள் நடைபெறமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’