வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 ஏப்ரல், 2013

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இடையில் மோதல்களை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்: பிரதமர்


சி ங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இடையில் மோதல்களை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனின் உரைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சம்பந்தனின் பேச்சானது பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிப்பதை காட்டுகிறது. சிறிய தரப்பினரை தவிர இலங்கையில் எவரும் எந்த தவறுகளையும் செய்வதில்லை. தமது பலத்தை காட்டவும், பிரபலத்தை தேடிக்கொள்ளவும் செயற்படும் சிறிய தரப்பினர் இலங்கை உள்ளனர். மனித குணத்தையும் உண்மையை இணைத்து பொய்யான கருத்துக்களை வெளியிடுவது பொறுத்தமானதல்ல. நாடாளுமன்றத்தில் பொய் கூறுவது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் பிரதமர் கூறியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’