த மிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படக் கூடிய வரி வருமான இழப்பிற்கு, ஈடாகவே இந்தத்தொகை வழங்கப்பட்டது என அப்போதைய இலங்கைக்கான இந்திய தூதுவர் டிக்ஸித் தெரிவித்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நட்டஈட்டுத் தொகை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 1987ஆம் ஆண்டு ஜூலை வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தப் பணக்கொடுப்பனவு வழங்கப்படுவதாக புலிகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஒரு பில்லியன் ரூபா பண உதவிகளை வழங்குதல் மற்றும் வடக்கு கிழக்கு இடைக்கால மாகாண சபையில் பெரும்பான்மை இருக்கத்தக்க வகையில் 12 இடங்களில் 7 இடங்களை புலிகளுக்கு வழங்குவதற்கு இனக்கம் காணப்பட்டது. இது தொடர்பில் பாரிஸில் கூட்டமொன்றை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த இரகசிய இணக்கப்பாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’