முன்னாள் இராணுவ குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருக்கும்போது அதனை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் சாத்தியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளதாக டெய்லிமிரருக்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோஸப்புடன் பேசியபோது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், முன்னாள் போராட்ட குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்போது அதனை பதிவு செய்ய முடியாது கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்ட குழுக்களின் முன்னாள் இழைத்த கொடூரங்கள் பற்றி அரசாங்கம் தகவல்களை சேர்த்துவைத்திருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி கருதுகின்றது. எனவே இப்போது பதிவு செய்ய முற்பட்டால் அரசாங்கம் சட்ட பிரச்சினைகளை கிளப்ப முடியும் என கட்சி நம்புகின்றது. ஆயினும், இலங்கை தமிழரசுக் கட்சி, அவர்களுடன் தேர்தல் ஒப்பந்தத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்படுவதை தடுப்பதற்கு மன்னார் ஆயர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் முயன்று வருகின்றன. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அதன் தலைவர்களை கேட்டுள்ளனர். தமிழ் போரட்ட இயக்கத்தை 1970ஆம் ஆண்டுகளில் தமிழ் புதிய புலிகள் எனும் அமைப்பு தொடக்கிவைத்தது. ஸ்ரீ சபாரத்தினம் என்பவர் 1971ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தை தொடக்கினார். தமிழ் புதிய புலிகள் பின்னர் தமிழீழ விடுதலை புலிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1980ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலை புலிகளிலிருந்து பிரிந்த ஒரு பகுதியினர் உமா மகேஸ்வரன் தலைமையில் புளொட் இயக்கத்தை தோற்றுவித்தனர். 1985ஆம் ஆண்டு புளோட் இயக்கம் 7,000 போராளிகளுடன் பயங்கரமான போராட்ட குழுவாக காணப்பட்டது. 1970ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய இன்னுமொரு இயக்கம் ஈ.பிஆர்.எல்.எப் ஆகும். இந்த கட்சிகளின் தலைவர்கள் சகலரையும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் கொன்றொழித்தது -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’