
"புனர்வாழ்வு பெற்றுள்ள விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு பட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக அவர்களுக்கான குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு பத்து வருடங்களுக்குள் மீள செலுத்தும் வகையிலான இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா கடனுதவியும் வழங்கப்பட்டு வருகின்றன.புனர்வாழ்வு பெற்றுள்ள இவர்களை அரசாங்கம் புதிய வாழ்க்கை முறைக்குள் கொண்டு செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது. அதே போன்று இன்னும் சில தினங்களில் 450 பேரை தென்னிலங்கைக்கு சுற்றுலா அழைத்துச் சென்று அவர்களுக்கு பல் வேறு இடங்களையும் காண்பிக்க விருக்கின்றோம்.புனர்வாழ்வு பெற்றுள்ள 180 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு சுகததாச விளையாட்டரங்கில் பல் வேறு விளையாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் தேசிய மட்ட குறி பார்த்து சுடும் போட்டியில் 4பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கும் செல்லவுள்ளனர். அதே போன்று கராத்தே கபடி போன்ற பல்வேறு விளையாட்டுக்களிலும் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களும் இந்த போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர். இதன் மூலம் இலங்கைக்கான புகழையும் இவர்கள் ஈட்டிக்கொடுக்கவுள்ளனர். புனர்வாழ்வு பெற்ற பலர் கலை இக்கியம், விளையாட்டு போன்ற பல் வேறு துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தகால பயங்கரவாத வன்செயல் காரணமாக வடக்கு கிழக்கு உட்பட தென்னிலங்கையிலுள்ள மக்களும் பாதிக்கப்பட்டனர். பயங்கரவாத வன்செயல் காரணமாக உயிர்களை இழந்த காயமடைந்த, தொழில் பாதிக்கப்பட்ட, சொத்துக்களை இழந்த அங்கவீனமடைந்த வர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை நாம் படிப்படியாக வழங்கி வருகின்றறோம். இந்த நட்ட ஈட்டு கொடுப்பனவுகளை வழங்கு வதற்காக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச 2013ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 200மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்தார். அதில் தற்போது 32 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான பூரன ஒத்துழைப்பையும் உதவியையும் எமது அமைச்சுக்கு வழங்கி வருகின்றார். இனம் மதம் மொழி பிரதேசம் பார்த்து இந்த நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவத்தில்லை. இவைகளுக்கப்பால் பதிக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்பட்டு கட்டம் கட்டமாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக விண்ணப்பித்த ஏனையோருக்கும் அவர்களின் விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு நட்ட ஈட்டுக்கொடுப்பனவுகள் வழங்கப்படும்" எனவும் அமைச்சர் கஜதீர மேலும் தெரிவித்தார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’