"புலிகள் இயக்க உறுப்பினர்களில 12,000 பேர் இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்தனர். அவர்களில் 11,500 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன" என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத வன்செயல்கள் காரணமாக பாதகிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு கொடுப்பனவுகள் வழங்கும் வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கஜதீர மேற்கண்டவாறு கூறினார். இந்த வைபவம் மட்டக்களப்பு தேவா மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வைபவத்தில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தொடர்ந்து உரையாற்றுகையில்,
-












