
பருத்தித்துறை பிரதேசத்தில் வைத்து குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு கடற்படையினர் கைது செய்துள்ளனர். 38 ஆண்களும், 18 பெண்களும், 24 சிறுவர் சிறுமியரும் இந்தக் குழுவில் அடங்கியதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. சந்தேக நபர்கள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’