சனல் 4 தொலைக்காட்சி தயாரித்துள்ள போர் தவிர்ப்பு வலயம் என்ற 90 நிமிட ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி மீண்டும் லண்டனில் திரையிடப்படவுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி 138 நாட்களில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை கல்லும் மக்ரே தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதி, கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும், புதுடெல்லியிலும் வெளியிடப்பட்டது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிகளவு நாடுகள் ஆதரவு அளிப்பதற்கு இந்த ஆவணப்படம் ஒரு காரணியாக இருந்தது. இந்தநிலையில், இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி நாளை செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் தரையிடப்படவுள்ளது. அதையடுத்து கேள்வி - பதில் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் முக்கிய கூட்டம் நடக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. இது கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையிலிருந்து இடமாற்றம் செய்வது குறித்து இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’