வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 ஏப்ரல், 2013

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு ஆளும் கட்சி தயார் : அமைச்சர் பஷில்



டக்கு மாகாணசபைத் தேர்தல் இவ் வருடம் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டது. நீல அலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வடக்குத் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டம் ஒன்றை ஆளும் கட்சி தயாரித்துள்ளது.
எதிர்வரும் மே தினத்திற்கு பின்னர் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபைத் தேர்தலில் எதிரணியினர் எந்த வேட்பாளரையாவது நிறுத்தி வெற்றிபெற்று காட்டட்டும். தேர்தலில் போட்டியிட முயற்சிக்கும் தனிநபர் வேட்பாளர்கள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. வடக்குத் தேர்தலை கோருவதற்கு புலிகளக்கு கடந்த காலங்களில் வக்காளத்து வாங்கியவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. வட மாகாணசபைத் தேர்தலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆயத்தமாகிவிட்டது. இதற்கான தயார்படுத்தலில் நாங்கள் ஈடுபட்டுவருகின்றோம். குறிப்பாக வடக்குத் தேர்தலை எதிர்கொள்வதற்கான திட்டம் ஒன்றை ஆளும் கட்சி தயாரித்துள்ளது. இதேவேளை, எதிர்க் கட்சிகள் எந்தவொரு பலமான வேட்பாளரையும் வடக்குத் தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற்று காட்டட்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி எந்தவொரு பலமான வேட்பாளரையும் நிறுத்தி வெற்றிபெற்றுக் காட்டட்டும். ஆனால் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தும் என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’