ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள 19 பேர் இலங்கை தமிழர்கள் மீள்குடியேற்றத்தை இலகுவாக்குவதற்காக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்துடனும் ஐக்கிய அரபு இராச்சியத்துடனும் மத்திய அரசாங்கம் தொடர்பு வைத்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்திய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
19 தமிழர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்களானால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுவார்கள் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இந்த 19 தமிழர்களில் சிலரை மூன்றாம் நாடுகளில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயம் ஏற்கெனவே மேற்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’