வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 மார்ச், 2013

தமிழ் அதிகாரியிடம் சிங்களத்தில் வாக்குமூலம்: விசாரணை ஆரம்பம்



சிங்களத்தில் தேர்ச்சியில்லாத ஒரு சுங்க அதிகாரியை ஊழல் தொடர்பான பிரச்சினையின் போது சிங்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கு கட்டாயப்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை தேசிய மொழிகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
தமிழரான இந்த சுங்க உத்தியோகத்தர் ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் போது சிங்களத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் பற்றி தன்து உத்தியோகஸ்தரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் மொழித்தொடர்பான பிரச்சினைகளை அவரச அழைப்பு இலக்கமான 1956 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும் அமைச்சர் கூறினார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’