இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஒப்புக் கொண்டால் ஜம்மு காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்தும் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை எழுந்துவிடும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமான அதிகாரிகள், அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இது தொடர்பிலான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில்; சமரசத்துக்கு வாய்ப்பு இன்னமும் உள்ளது. அமெரிக்கா தற்போது சுற்றில் விட்டுள்ள தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது போல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று சமரசத் தீர்மானம் வலியுறுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சிக்கல் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசே உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் தீர்மானம் இறுதியாக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இது போன்ற கோரிக்கையால் இந்தியாவும் மகிழ்ச்சியடையாது என்பதையும் கூறினேன். ஏனெனில், இதை இந்தியா ஏற்றுக் கொண்டால் காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புண்டு என்றும் அவர் தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் ஐ.நா. மனித உரிமைக் பேரவையில் நிறைவேற்றப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஐ.நா பாதுகாப்பு பேரவையில் ஒப்புதல் அளித்தால்தான் மதிப்பும், பலமும் கிடைக்கும். இப்போது அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தைப் பொறுத்த வரை, அதற்கு ஐநா பாதுகாப்பு பேரவையில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ரஷ்யாவோ, சீனாவோ தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்மானத்தை நிராகரித்து விடும். இந்த யதார்த்த நிலைமையை பிளேக்கும் மற்ற அதிகாரிகளும் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் நழுவல் அமெரிக்காவும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று நேரடியாகக் கோராமல், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளையின் பரிந்துரையைக் குறிப்பிட்டுள்ளது. அந்தப் பரிந்துரையில் சுதந்திரமான, சர்வதேச விசாரணை தேவை என்று கூறப்பட்டுள்ளதை அமெரிக்கா மேற்கோள் காட்டியுள்ளது. இத்தீர்மானத்தால் விடுதலைப்புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் கிடைப்பதற்கோ, இலங்கையில் பிரிவினைவாதம் மற்றும் தமிழ்த் தீவிரவாதம் மீண்டும் உருவாகவோ வாய்ப்பு ஏற்படக் கூடாது என்பதை நான், அமெரிக்க அதிகாரிகளிடம் கூறினேன். புலிகளை அழித்த அமெரிக்கா விடுதலைப்புலிகளின் தோல்விக்கு அமெரிக்கா பங்களித்தது என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டினேன். புலிகளின் கப்பல்களை அமெரிக்க ஆயுதங்கள் மூலமே இலங்கையால் அழிக்க முடிந்தது. இந்த விஷயத்தில் ராஜபக்ஷ அரசும் தனது நிலைப்பாட்டை மென்மையாக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இலங்கையின் ஏற்றுமதிச் சந்தைகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார் -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’