இலங்கை வரலாற்றில் போக்குவரத்துச் சேவையில் பாரிய புரட்சி செய்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
1439 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு கல்லடி புதியபால நிர்மாணப்பணிகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு விட்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்;. இலங்கை நாட்டில் மட்டக்களப்பு மிக அழகான நகரமாக மாற்றியமைக்கப்படும். மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் ஆற்றங்கரை வீதி அபிவிருத்தி, 1700 மில்லியன் ரூபா செலவில் விமான நிலையம் நிர்மாணித்தல்,மட்டக்களப்பு மைதானம் திருத்தியமைக்கப்படல், வீதி அபிவிருத்திகள், பாடசாலை அபிவிருத்திகள் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு கல்லடி பாலம் இலங்கையில் நீண்ட பாலங்களில் 3ஆவது இடத்தில் திகழ்வதுடன் அதி நவீன தொழிநுட்ப முறையிலான பாலங்களில் முதன்மையான பாலமாக மட்டு கல்லடி பாலம் திகழ்கின்றது. மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை செல்லும் வழியில் ஐந்து பாலங்கள் தற்போது காணப்படுகின்றன. இவ்வாறு பாலங்;கள் கட்டப்பட்டிருப்பதனால் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு 2 மணித்தியாலயங்களில் செல்ல முடியும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு பல்வேறு விடயங்கள் இலேசுபடுத்தப்பட்டு நேரங்கள் மீதப்படுத்தப்படுகின்றன. இதேபோன்ற பாலமொன்றை மண்முனையில் கட்டுவதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை மண்முலை புதிய பாலத்தை எதிரிவரும் மே மாதம் அளவில் பூர்த்தி செய்ய முடியும் எனவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’