இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைப்பதற்கு நான் இடமளிக்கமாட்டேன். இன்று எங்கள் கட்சியின் மீது முஸ்லிம்களின் ஆதரவுகள் பெருகியுள்ளன. கடந்த ஜனாதிபதியின் தேர்தலின் போது எனக்கு எதிராக தேர்தலில் செயற்பட்ட சில பிக்குகளே இந்த சூழ்ச்சியின் பின்னால் உள்ளார்கள். இதனை நான் உணர்ந்தவனாக இருக்கின்றேன்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
'முஸ்லிம்களுக்கு எதிரான சதியின் பின்னால் உள்நாட்டு சக்திகளுடன் சில வெளிநாட்டுச் சக்திகளும் உள்ளதை நான் அறிவேன். எம்முடைய அரசியல் ஸ்தீரத்தன்மையை குழுப்புவதே இவர்களின் நோக்கமாகும்' என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் அமைப்பின் தலைவர் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலேயே இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழும் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியிடம் விளக்கமளித்தார். அதன் பின்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருப்பதாக நான் ஏற்றுக்கொள்கின்றேன். முஸ்லிம்களுக்கு எந்தவொரு அநியாயமும் இடம்பெற ஜனாதிபதி என்ற வகையில் இடமளிக்க மாட்டேன். ஒரு இக்கெட்டான நிலையில் இருக்கும் பொழுது ஜம்மியதுல் உலமா எங்களுடைய எந்தவொரு வேண்டுகோளுமின்றி சுயமாக ஜெனீவாவுக்குச் சென்று அங்கு வருகை தந்திருந்த அரபு நாடுகளை சந்தித்து மிகவும் காருண்ணியமான முறையில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுத் தர பெரும் பங்காற்றியுள்ளனர். அதனை நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம். ஏதாவது ஒரு இடத்தில் சட்டவிரோதமான சம்பவம் நடைபெறும் போது அது சம்மந்தமாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டால் தகுதி பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஜனாதிபதி மேலும் அங்கு தெரிவித்துள்ளார். அங்கு கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சத்தார் பேசுகையில், 'ஒரு போதும் இல்லாதவாறு குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜெனீவா மனித உரிமை மாநாட்டுக்கு பிற்பாடு குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் சில சம்பவங்கள் நடைபெற்றன. இந்தச் சம்பவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைப்பாளர் என்ற வகையில் எல்லா இடங்களுக்கும் சென்று நடவடிக்கை எடுத்துள்ளேன். பொலிஸ், இராணுவம், அரசியல் பிரமுகர்கள் ஆகியவர்கள் வழங்கி உதவியின் காரணமாக பாரதூரமான பிரச்சினை வர விடாமல் தடுப்பதற்காக இவர்கள் உதவி புரிந்துள்ளார்கள். ஆனால் ஆரம்பத்தில் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து சிங்கள மக்களிடத்தில் பெரியதொரு ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் தற்போது பௌத்த அறநெறிப் பாடசாலைகளிலும் மற்றும் பாடசாலைகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை மனதிற்குள் உட்புகுத்தி முஸ்லிம்கள் மீது சிங்கள மக்களை வெறுப்பு உண்டாக்கும் வகையில் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் முஸ்லிம்களுக்கு ஒரு சதியைச் செய்வதன் ஊடாக இன்று அரசாங்கத்திற்கு முழு ஆதரவாகயிருக்கின்ற பௌத்த மக்களை அரசாங்கத்தின் மீது வெறுப்படையச் செய்து அரசாங்கத்தற்கு எதிராக அணி திரட்டுவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சரி முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டை விட்டோ அல்லது எங்கள் பிரதேசங்களை விட்டோ வெளியேற முடியாது. நாங்கள் இலங்கையர் என்ற வகையில் எங்கள் பிரச்சினைகளை முஸ்லிம் நாடுகளின் தூதுரகங்களுக்கு கொண்டு செல்லவோ அல்லது வேறு யாரிடமும் முறைப்பட முடியாது. இந்த நாட்டின் தலைவர் என்ற வகையில் நாங்கள் ஜனாதிபதியையே தான் நம்பி இருக்கின்றோம். முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்' என்று அப்தல் சத்தார் அங்கு மேலும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, ஏ.எச்.எம்.பௌசி. கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், பிரதி அமைச்சர் அப்துல் காதர், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், உள்ளூராட்சிமன்ற தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’