
வொசிங்டனில் நடந்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்;ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2012இல் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து எவ்வாறு வேறுபட்டது என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாக குறிப்பிட்டிருந்தேன். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு இலங்கை இன்னும் இன்னும் அதிகமாக செய்யவேண்டும் அதனை ஊக்குவிக்கும் வகையிலேயே 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதே இந்த தீர்மானம் கொண்டு வரப்படும். இந்தத் தீர்மானமானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட, தனது மக்களுக்கான கடப்பாடுகளை பின்பற்றுமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளும். இது தான் தீர்மானத்தின் உள்ளடக்கமாகும் இதற்கு நாம் அனுசரணை வழங்கி, ஆதரவு அளிப்போம் என்றார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’