.jpg)
அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு 'ரன்பிம' காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், "வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத காலங்களில் தங்களின் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இருப்பிடங்களை விட்டு வெளியேறி இருந்தனர். பயங்கரவாதத்தினை முற்றாக ஒழித்த அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்கள் தங்களது சொந்தக் கிராமங்களில் சுதந்திரமாக வாழ்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளதுடன், அபிவிருத்தியின் பலாபலன்களையும் வழங்கி வருகின்றது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களது சொந்த மண்ணில் உரிமையுடன் வாழ்வதே மஹிந்த சிந்தனை திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு அமைய வடக்கு, கிழக்கு மக்களுக்கு 1,000 காணித்துண்டுகளுக்கு காணி உறுதிப்பத்திரம் இன்று வழங்கப்படுகின்றன. அரசாங்கக் காணிகளில் குடியேறியவர்களுக்கும் சட்டப்படியான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வசிப்பதற்கும் விவசாயத்திற்கும் 20 பேர்ச்சஸ் தொடக்கம் 3 ஏக்கர் காணித் துண்டுகள் வழங்கப்படவுள்ளன" என்றார். இந்நிகழ்வில் தொலைத்தொடர்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’