வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 மார்ச், 2013

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது ஏன்: விளக்கும் சல்மான் குர்சித்



மிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்தும், இந்தியாவின் தேசிய நலனை முன்னிறுத்தியுமே, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா தீர்மானித்தது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள சிறப்பு செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நாம் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருக்க முடியும் அல்லது வாக்களிக்காமல் விட்டிருக்க முடியும். தமிழ்நாட்டின் தீவிர உணர்வுகளை கருத்தில் கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அதனை முற்றிலும் புறக்கணித்து விடமுடியாது. ஆனால் அது வெளிநாட்டுக் கொள்கையை முற்றிலுமாக தீர்மானிக்க முடியாது. அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா நீர்த்துப் போகச் செய்யவில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரங்களைப் பகிரவும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் நெருக்குதல் கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’