சர்ச்சைக்குரிய கிரேக்க பிணைகள் மீதான முதலீடுகள் பற்றிய உரிமை மீறல் முதலீடு பற்றிய உரிமை மீறல் மனுவை விசாரிப்பதிலிருந்து பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று தானாக விலகிக்கொண்டார்.
மனுதாரரின் வழக்குரைஞர் வலியுறுத்தியதை அடுத்தே இந்த சர்ச்சைக்குரிய மனு விசாரணையிலிருந்து பிரதம நீதியரசர் விலகிக்கொண்டார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான என்.ஜி.அமரதுங்க, சத்யா ஹெட்டிகே ஆகியோர் கொண்ட குழாம் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்குரைஞர் உபுல் ஜயசூரிய, பக்கச்சார்பின்மை குறையலாம் என்பதால் பிரதம நீதியரசர் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். பிரதிவாதிகளான அஜிட் நிவாட் கப்ரால், பி.பீ.ஜயசுந்தர ஆகியோர் நாணய சபையின் அங்கத்தவர்களாக இருந்த வேளையில் பிரதம நீதியரசர் மத்திய வங்கியின் ஆலோசகராக இருந்தமையினால் பக்கச்சார்பு குறையலாம் என்பதால் பிரதம நீதியரசர் இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலக வேண்டுமென கேட்டுக்கொண்டார். தனக்கு இதில் பிரச்சினையில்லை என தெரிவித்த பிரதம நீதியரசர், தன்னைக் கொண்டிராத ஒரு குழாம் முன்னிலையில் மே 6இல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’