இந்தியாவுக்கு அடிபணிந்து 13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்களுக்கு வழங்கினால் அதுவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு சாவு மணியாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார். வடபகுதி தமிழ் மக்கள் பாதைகளை கேட்கவில்லை. வாழ்வாதாரத்தையே கேட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெளிவுப்படுத்துகையில், சர்வதேச நாடுகளின் யுத்த நிறுத்த கோரிக்கையை நிராகரித்து அதனை முன்னெடுத்து விடுதலை புலிகளை ஜனாதிபதி ஒழித்தார். அதேபோன்று கடும் போக்கை கடைபிடித்து 13ஆவது திருத்தத்தையும் ஜனாதிபதி தமது அரசாங்கத்திற்கு இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி ஒழித்திருக்க வேண்டும். அதனை செய்யாததன் பலாபலனே இன்று ஐ.நா.வில் எதிரொலிக்கின்றது. இதனை அமுல்படுத்துவதற்காகவே இந்தியாவின் ஆலோசனையின் பிரகாரம் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணையை முன் வைத்துள்ளது என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’