இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் சர்வதேச சமுதாயத்துடன் ஆக்கபூர்வமாக சேர்ந்து இயங்கவேண்டும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார்.
இலங்கையின் அவதான அறிக்கையை தன்னிடம் கையளித்த ஐந்து தூதுவர்களுடன் பேசிய போதே பான் கீ மூன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய நல்லிணக்கத்தையும் அதேவேளை நேர்மையான அனைத்தையும் அடக்கிய செயன்முறையூடாக பொறுப்பு கூறும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதன் முக்கியத்துவத்தை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன் என்றும் அவர் சொன்னார். இலங்கையில் யதார்த்தமான நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான முக்கியத்துவத்தை இலங்கை முழுமையாக புரிந்து செயற்பட வேண்டும். எனவே யதார்த்தமானதும், முழுமையானதுமான தேசிய நல்லிணக்கன முனைப்புக்கள் மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பங்களாதேஷ்,நைஜீரியா,ருமேனியா, இலங்கை மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளைச்சேர்ந்த ஐவர் இலங்கை பற்றிய அவதானிப்பு அறிக்கையை தயாரித்திருந்தனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் ஊடாக, யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளங்கிக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் ஆகியன குறித்த அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’