வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 மார்ச், 2013

சர்வதேச சமூகத்தை சுலபமாக ஏமாற்றிவிட முடியாது – தயான் ஜயதிலக்க


சர்வதேச சமூகத்தை சுலபமாக ஏமாற்றிவிட முடியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின்இலங்கை முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும், சிரேஸ்ட இலங்கை ராஜதந்திரியுமான பேராசிரியர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தை இலகுவாக ஏமாற்றிடவிட முடியும் என அரசாங்கம் நினைப்பதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகத்திற்கு சரியான தகவல்களை எடுத்துச் செல்ல வேண்டியது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் சுயாதீனமான இயங்க அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களின் வரையறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கும் போது, குறித்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையில் பதிலளிப்பதில் பிரதிநிதிகள் குழு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் சகல நாடுகளும் இலங்கையைப் போன்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என அரசாங்கம் கருதிவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பெற்றுக் கொண்ட வாக்குகளை விடவும் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளை இலங்கைப் பெற்றுக் கொண்டால், சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’