இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களைச் செய்திருப்பின் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழகம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.
உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர், கடலூர் மாவட்டம், நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வரும் இவர், இன்று பகல் 12 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் போத்தலுடன் வந்து, இலங்கை ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிக்க வேண்டும் என்று கூச்சலிட்டவாறு தனக்குத் தூனே தீக்குளித்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், அங்கிருந்தோர் தீயை அணைத்து மிகவும் ஆபத்தான நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். உயிருக்குப் போராடிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மணி, 'தனித் தமிழீழம் அமைய வேண்டும் - இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக இந்த உலகம் அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும்' என்று கூறியுள்ளார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’