
இந்தியாவுக்கு அடிபணிந்து 13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்களுக்கு வழங்கினால் அதுவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு சாவு மணியாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார். வடபகுதி தமிழ் மக்கள் பாதைகளை கேட்கவில்லை. வாழ்வாதாரத்தையே கேட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.












