கனடாவில் சட்டவிரோதமாக நுழைவதற்காக மனித கடத்தல்காரர்களை தங்கியிருப்பவர்கள் தமது வாழ்நாள் சேமிப்பினை வீணாக தூக்கி எறிகின்றனர். இதனால் கனடாவில் சட்டவிரோதமாக நுழைவதற்கு ஒரு போதும் நினைக்க வேண்டாம் என்று கனேடிய குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்லின கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனீ தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கனடாவின் குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்லின கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனீ இன்று திங்கட்கிழமை காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
"போதியளவு அரசியல் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மீறல் ஆகிய செயற்பாடுகளினாலேயே அதிக புலம்பெயர்வு இடம்பெறுகின்றது. கனடாவிற்கான சட்டவிரோத புலம்பெயர்வின் காரணமாக வருடாந்தம் 1,000 பேர் கொல்லப்படுகின்றனர்.
கனடாவில் சட்டவிரோதமாக நுழைவதற்காக மனித கடத்தல்காரர்களை தங்கியிருப்பவர்கள் தமது வாழ்நாள் சேமிப்பினை வீணாக தூக்கி எறிகின்றனர். இதனால் கனடாவில் சட்டவிரோதமாக நுழைவதற்கு ஒரு போதும் நினைக்க வேண்டாம்.
மனித கடத்தல்காரர்களை பயன்படுத்தி பின் வாசலினால் கனடாவிற்குள் நுழைய முற்சிப்போர் ஒருபோதும் வெற்றியடையமாட்டார்கள். ஆனால் இந்த முயற்சியினால் அவர்களின் பணங்கள் வீணாகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவிற்கு சட்டவிரோதமாக நுழைபவர்கள் மலேசியா, தாய்லாந்து, இந்தேனோஷியா உள்ளிட்ட சில தென் கிழக்கு ஆசிய நாடுகளை இடமாற்றல் நிலையமாக பயன்படுத்துகின்றனர்.
இந்த அனைத்து நடவடிக்கைகளும் கடந்த இரண்டு வருடங்களிற்குள் முடக்கப்பட்டுள்ளன. இந்த தொடர் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக சுமார் 12 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.
இது தாய்லாந்து, தென் கிழக்கு ஆசியா மற்றும் வேறெங்காவது இடங்களில் மனித கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவுதல் உள்ளிட்ட மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும்.
கடந்த ஜுன் மாதம் முதல் கனடாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய குடியேற்ற நடைமுறைகளினால் மனித கடத்தில் குற்றவாளிகளாக காணப்படுவோருக்கு ஆகக் குறைந்தது 10 வருட சிறைத் தண்டனை வழங்கப்படவுள்ளது.
முறையற்ற வகையில் கனடாவிற்குள் வருகை தந்தோர் ஐந்து வருட காலத்திற்கு நிரந்தர குடியுரிமை அந்தஸ்திற்கு விண்ணப்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த கால பகுதியில் தமது குடும்ப உறுப்பினர்கள் கனடாவிற்கு வருவதற்காக விண்ணப்பிக்கவும் முடியாது.
சட்ட ரீதியான அகதிகள் உள்ளடங்களாக கனடாவிற்குள் சட்டபூர்வமாக வருவோருக்கு அனைத்து விடயத்திலும் உலகின் வேறேந்த நாட்டையும் விட அதிகமாக தனி மனித குடிவரவுகளை ஏற்றுக்கொள்ளும் கனடாவின் தாராள குடியேற்ற முறை தொடரும்.
இலங்கையில் இருந்து சட்ட ரீதியாக கனாடவிற்குள் நுழைபவர்கள் கல்வி கற்க, தொழில் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட முடியும். வருடாந்தம் சுமார் 4,000 இலங்கையருக்கு நிரந்தர குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படுகின்றது.
இதனால் கடந்த ஆறு வருடங்களில் 25,000 இலங்கையருக்கு கனடாவில் நிரந்த நிரந்தர குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படுள்ளது" என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’