நாட்டுக்குள் 'மத அடிப்படை வாதம்" ஊடுறுவியுள்ளதா என்பது தொடர்பிலும் அதன் பின்னணி என்னவென்பது தொடர்பிலும் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபாலடி சில்வா சபையில் இன்று தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது கவனத்தை செலுத்தியுள்ளாரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தேசிய கூட்டணியின் எம்.பி. அனுர திசாநாயக்கவின் விசேட கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது தோன்றியுள்ளதாக கூறப்படும் மத அடிப்படைவாதம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
இதன் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா அல்லது உள்நாட்டு சக்திகள் உள்ளனவா? என்ன நோக்கத்திற்காக இவ்வாறான மத அடிப்படைவாதம் உருவாகியுள்ளது என்பது தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைப்பதற்கு நாம் ஆலோசித்துள்ளோம் என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’