இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாத இறுதியில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் எண்ணிக்கையில் ஒருவர் அதிகரிக்கப்படவுள்ளார். இதற்கான பரிந்துரைக்கான நபர்களின் விபரங்கள் இலங்கை விளையாட்டு அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலேயே சனத் ஜெயசூரியவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பேரின் விபரங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பட்டியலில் மேலும் சிலர் சேர்க்கப்படலாம் எனவும், இவர்களில் ஒருவர் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்படவுள்ளார். சனத் ஜெயசூரிய இலங்கையின் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவரது கட்சியைச், விளையாட்டமைச்சரால் நியமிக்கப்படவுள்ள புதிய உறுப்பினராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய தேர்வாளர்களின் பதவி இம்மாத இறுதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய தேர்வுக்குழுவும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’