களனி தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக பதவி விலகும்படி அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவலவின் கொலை மீதான விசாரணைகள் முடியும் வரை மேர்வினின் தொகுதி அமைப்பாளர் பதவியின் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இப்பதவிக்கு பஷில் ராஜபக்ஷவை தற்காலிகமாக நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹசித்த மடவலவின் கொலையுடன் மேர்வின் சில்வாவே தொடர்புபட்டுள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
களனி பிரதேச சபை உறுப்பினர்களும் மேர்வின் மீது நேரடியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.
மேலும் இக்கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பேரும் மேர்வின் சில்வாவுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.
எனினும் அமைச்சர் மேர்வின் சில்வா இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’