சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக இந்தி படத்தில் நடித்த நடிகர் ரித்திக் ரோஷன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி சூசன் சொகுசு படகில் பிரபலங்களுக்கு நேற்று இரவு பார்ட்டி கொடுத்தார். பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ரோஷனின் மகனான ரித்திக் ஆஷா என்னும் இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு ஆப் கே தீவானே என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரித்திக் ரோஷன் அபிஷேக் பச்சன் மற்றும் கரீனா கபூர் அறிமுகமான அதே ஆண்டில் ஹீரோவாக அறிமுகமானார். அவர் கைட்ஸ் மற்றும் ஜிந்தகி நா மிலேகி தோபாரா ஆகிய படங்களில் பாடியுள்ளார். இளம் வயதில் அவருக்கு பேசுவதில் சிரமம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’