வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 ஜனவரி, 2013

'13 போகும்''5 திருமணமா': கெஹலிய விளக்கம்


டகத்துறை அமைச்சின் கேட்டோர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெலவிற்கும் இடையில் சுவாரஷ்யமான சம்பாஷனைகள் இடம்பெற்றன. கேள்வி நேரத்தின் போது,
13 ஆவதுடன் போகும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிடம் அதிகார பகிர்வை அமுல்படுத்துவது தொடர்பில் உறுதியளித்திருக்கின்றார். என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜத்த ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளாரே என்று வினவினர். ஆம், ஆம் 13 ஆவது போகும் என்று அமைச்சர் கெஹலிய பதிலளிக்கையில் இடைமறித்த ஊடகவியலாளர்கள் 13 போனால் (அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துடன்), அதற்காக என்ன? வரும் என்று வினவினர்? இல்லை, இல்லை என்னிடம் ஒரு பழக்கம் இருக்கின்றது, கேள்வி கேட்கும் மொழியிலேயே பதிலளிப்பேன். 13 ஆவதுடன் போகும் என்று கேள்வி கேட்டீர்கள். அதாவது, 13 ஆவது திருத்தம் தற்போதும் எட்டு மாகாண சபைகளிலும் அமுல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. எங்களுடைய உறுப்பினர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர். 13 ஆவது போய்க்கொண்டிருக்கின்றது. ஆதனால் '13 போகும்' என்றேன். மீண்டும் கேள்வியை தொடுத்த ஊடகவியலாளர்கள் இல்லை, இல்லை அமைச்சரே 13 ஆவது திருத்தத்தை தோளில் சுமந்துக்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள அமைச்சர் ஜி.எல்.பீரஸ் பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார். என்று விஜித்த ஹேரத் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார் என்றனர். அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் தோளில் ஒன்றையும் சுமந்துக்கொண்டு செல்லமுடியாது என்று எனக்கு தெரியும். ஏனென்றால், அவருடைய தோளானது எங்களுடைய தோள்ளை போன்றது அல்ல என்பதுடன் ஜே.வி.பி 1971 ஆம் ஆண்டிலிருந்தே இவ்வாறான பஜனைகளையே பாடிக்கொண்டு வருகின்றது. இன்றும் அதனையே செய்கின்றது. என்றார். ஆனால், ஐந்து திருமணங்களை செய்யவேண்டும். என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே என்று வினவுகையில், சில வினாடிகள் சிரித்துக்கொண்டே இருந்துவிட்டு, இந்த கேள்விக்கு ஒலிவாங்கியை முடுக்கிவிடாமல் தான் பதிலளிக்கவேண்டும் என்று தெரிவித்துவிட்டு, ஊடகவியாளர் மாநாட்டில் 5 திருமணங்கள் பற்றி கேள்விக்கேட்கின்றார். என உங்களுடைய மனைவிக்கு தெரியப்படுத்தவா? என்று கேள்வியைக்கேட்ட ஊடகவியலாளரிடமே தொனியை குறைத்து கேட்டுவிட்டார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’