வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 ஜனவரி, 2013

விஸ்வரூபத்துக்கு எதிர்ப்பு-"கலாச்சார பயங்கரவாதம்": கமல்


டிகர் கமல்ஹாசன் பண்பாட்டு பயங்கரவாதத்திற்கு முற்றுப் புள்ளிவைக்க வேண்டியது அவசியம் என்றும் தனது விஸ்வரூபம் திரைப்படத்தினை வெளியிடுவதில் உள்ள சிக்கல்களை சட்டபூர்வமாக எதிர்கொள்ளவிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இஸ்லாமியர்களை விஸ்வரூபம் திரைப்படம் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி அதற்குத் தடைவிதிக்க வேண்டுமென்று கோரி பல்வேறு முஸ்லீம் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கவிருப்பதாக அறிவித்ததன் பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கினைக் காரணம் காட்டி, நாளை வெள்ளியன்று(25.1.13) வெளியாகவிருந்த அத்திரைப்படத்திற்கு இருவாரத்தடை விதித்திருக்கிறது. தற்போது வெளிநாட்டில் இருக்கும் கமல்ஹாசன், இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், தான் முஸ்லீம்களுக்கெதிரானவன் என்பது போல அரசியல் காரணங்களுக்காகத் தன்னை சில சிறிய அமைப்புக்கள் சித்தரிக்க முயல்வதாகவும் அது தனக்கு மிகுந்த மனவருத்தத்தினைத் தருவதாகவும், கூறியிருக்கிறார். தொழில்ரீதியான வரம்புகளைக் கடந்து எப்போதுமே தான் நாகரிகத்திற்காகவும், மனிதாபிமானத்திற்காகவும் குரல்கொடுத்து வந்திருப்பதாகவும், இந்து முஸ்லீம் நல்லிணக்கத்திற்காகவே உருவாக்கப்பட்ட ஹார்மனி இந்தியா என்ற அமைப்பில் உறுப்பினராயிருக்கும் தான் முஸ்லீம்களை அவமானப்படுத்தும்வகையில் படமெடுத்திருப்பதாகக் கூறுவது தன்னை அவமதிப்பதாகும் என்கிறார் கமல். சமூகத்தில் பிரபலமானவர்களைத் தாக்குவது கூட பிரபலமாகும் வழிதானே என்கிறார் அவர். நடுநிலை தேசபக்த முஸ்லீம்கள் அனைவரும் தனது திரைப்படத்தைப் பார்த்து பெருமை கொள்வர், அவ்வாறு அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையிலேயே விஸ்வரூபம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் வலியுறுத்துகிறார் கமல். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’