வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 டிசம்பர், 2012

பாகிஸ்தானில் நடைபெற்றதை போன்று இலங்கையிலும் இடம்பெற ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி


நீதிமன்றத்தை பிளவுப்படுத்தி அரசியலாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிஸ்தானில் நீதித்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சூழலைப் போன்று இலங்கையிலும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. ஜனநாயக ரீதியாக அமைக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதற்கு இந்த நாட்டின் புத்திசாலி மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கச்சபை மற்றும் நீதிமன்றம் ஆகியவை மக்கள் தேவைகளை புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும். எவரும் குற்றம் சுமத்தாதவாறு நீதிமன்றம் தனது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்பிக்கை இழக்க நேரிடும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மினுவாங்கொடை பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’