ப யங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஏழு பேர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 மாணவர்களில் ஏழுபேரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதை அடுத்து மேற்படி மாணவர்கள் எழுவரும் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகளை ஒட்டினார்கள், ரெலோ அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுவீசினார்கள் உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 10பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவர் சில தினங்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் மேலும் 7பேர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’