வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 8 டிசம்பர், 2012

இந்திய இரகசியங்களை இலங்கைக்கான பாக். தூதரக அதிகாரிகள் மூலம் கடத்திய நபர் மீது தேசிய பாதுக்காப்புச் சட்டம்


ந்திய இராணுவ இரகசியங்களை இலங்கை வழியே பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி மீது இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரியை கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி திருச்சியில் கியூ பொலிஸார் கைதுசெய்தனர். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மூலமாக இந்திய இராணுவ இரகசியங்களை கடத்தினார் என்பது தமீம் அன்சாரி மீதான குற்றச்சாட்டு. மேலும் தமீம் அன்சாரியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கியூ பிரிவு போலீஸ் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய பொது மற்றும் சட்டத் துறைச் செயலர் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, பாதுகாப்புடன் கூடிய தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’