வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 8 டிசம்பர், 2012

பிரதம நீதியரசருக்கு எதிரான 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான முதலாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார். பிரதம நீதியரசருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரண்டு குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பிரதம நீதியரசர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சர் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். செலிங்கோ சமூக வலையமைப்பு தொடர்பான வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த உயர்நீதிமன்ற நீதியரசர் ஷிராணி திலகவர்தனவை அதிலிருந்து நீக்குவதற்காக பிரதம நீதியரசர் அவரது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார். தேசிய அபிவிருத்தி வங்கி கணக்குகள் மற்றும் மேலும் சில வங்கிகளில் பேணப்பட்டு வந்த 20 கணக்குகள் தொடர்பான சொத்து விபரங்களை வெளிப்படுத்த பிரதம நீதியரசர் தவறினார். பிரதம நீதியரசரின் கணவரான பிரதீப் காரியவசம்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டு வழக்கினை விசாரிக்கவிருந்த நீதவான் நீதிமன்ற நீதவானை இடமாற்றம் செய்வதற்கு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் போன்ற மூன்று குற்றச்சாட்டுக்களுமே நிரூபிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, செலிங்கோ நிறுவனத்தின் சொத்துக்களை கொள்வனவு செய்தமை மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கியில் மூன்று கோடியே 4 இலட்சம் ரூபாவினை வைப்பிலிட்டமை ஆகிய இரு குற்றச்சாட்டுக்களிலிருந்து பிரதம நீதியரசர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சர் சிறிபால டி சில்வா மேலும் கூறினார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’