வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 8 டிசம்பர், 2012

மேர்வின் சில்வாவினால் சபையில் கூச்சல் குழப்பம்


பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மீதான விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டபோது சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சர் மேர்வின் சில்வா சபைக்கு நடுவாக எதிரணியின் பக்கத்திற்கு செல்வதற்கு முயற்சித்த வேளையிலேயே சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிரணி உறுப்பினர்களை ஏசியவாறே அமைச்சர் மேர்வின் சில்வா சபைக்கு நடுவே ஓடினார். விரைந்து செயற்பட்ட படைக்கல சேவிதர்கள் அவரை எதிரணியின் பக்கமாக செல்லவிடாமல் தடுத்தனர். தெரிவுக்குழுவின் முன்னாள் உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க மற்றும் விஜித்த ஹேரத் தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டபோதே இந்த கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அறிக்கையை கையளித்த தெரிவுக்குழுவின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா பிரதம நீதியரசருக்கு பதிலளிப்பதற்கு 20 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,தெரிவுக்குழு எட்டு நாட்கள் கூடியதாகவும தெரிவித்தார். இதேவேளை பிரதம நீதியரசரினால் 139 பக்கங்கள் அடங்கிய அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டை தெரிவுக்குழு ஏற்றுக்கொண்டதாவும் அவர் சபையில் தெரிவித்தார் -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’