வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 டிசம்பர், 2012

நாட்டுக்கு துரோகியாகாமல் பதவி விலகுவது நீதியரசருக்கு நல்லது: தே.தே.இ.


நாட்டிற்கு துரோகியாகாமல் பதவியை விட்டு விலகிச்செல்வதே பிரம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு நல்லது. ஏனெனில் சர்வதேச சக்திகள் நாட்டிற்கு எதிரான சதியினை மீண்டும் புதுக்கடையிலிருந்து ஆரம்பித்துள்ளன என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. குற்றவியல் பிரேரணையும் தெரிவுக்குழு விடயமும் அரசியலமைப்பிற்கு உட்பட்டவாறு சட்ட ரீதியாகவே இடம்பெற்றுள்ளது. இருப்பினும் தெரிவுக்குழுவில் நடைபெற்ற விசாரணை எந்தளவிற்கு நியாமானதென தெரியாது. இதற்கான பதில் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விவாதத்தின் போது தெரிய வந்துவிடும் என்றும் அவ்வியக்கம் குறிப்பிட்டுள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று சௌசிறிபாயவில் நடைபெற்ற போதே அவ்வியக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரவினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’