12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூக மயப்படுத்தப்பட்டது பெரு வெற்றியாகும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் வாழ்வின் எழுச்சித் திட்டத்தினூடாக பாரிய முன்னேற்றமடைந்து வருகிறது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் குறுகிய காலத்தினுள் மீள்குடியேற்றப்பட்டனர். அத்தோடு அந்த மக்களின் வாழ்வாதாரமும் மேம்படுத்தப்பட்டது. 2013 வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 12 ஆயிரம் முன்னாள் புலிகள் சமூகமயப்படுத்தியிருப்பது பெரும் வெற்றியாகும். வாழ்வின் எழுச்சி திட்டத்தினூடாக வறுமையை ஒழித்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக நன்மை அடைந்துள்ளனர். ஜனாதிபதியின் உதவியோ அமைச்சர் பசில் ராஜபக்சவின் பங்களிப்பு இன்றியோ இந்த வெற்றிகளை எட்ட முடியாது. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி துறையினூடாக கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த நவடிக்கை எடுத்துள்ளோம். சர்வதேச சந்தையை இலக்கு வைத்து பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அடங்கலான பல அமைச்சுக்களுடன் இணைந்து பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது பாரம்பரிய கைத்தொழிற் துறையை ஊக்குவிக்க பயிற்சிகள், உபகரணங்கள் வழங்கப்படுகிறது. வட மாகாணத்தில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தெங்கு, பனை சார் கைத்தொழில்களை ஊக்குவிக்க நிவாரணம், உதவிகள் வழங்கி வருகிறோம். சிறு மத்திய தர கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், மூலப் பொருட்கள் வழங்கவும், சந்தை வாய்ப்பை அதிகரிக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் பனைக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்காக பனங்கன்றுகளை வழங்கி வருகிறோம்.. இந்திய உதவியுடன் பனை அபிவிருத்தி நிறுவனத்தை மீள் ஆரம்பித்தது தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். வடக்கில் போன்றே சப்ரகமுவ மாகாணத்திலும் பனைக் கைத்தொழிலை முன்னேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. புதிய படைப்புகளை ஊக்குவிக்கவும் புதிய தொழில் நுட்ப வசதிகளை வழங்கவும் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’