வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 நவம்பர், 2012

அஸ்வரின் நடவடிக்கை அறுவறுப்பானது: பிரபா


நாடாளுமன்றத்தில் தமது கருத்துக்களை கூறுவதற்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு. இதனை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனது கருத்துக்களை கூறும் பொழுது சிறுபான்மை மக்களின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அஸ்வர் எம்.பியின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது அறுவறுப்பாக இருக்கின்றது" என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நாடாளுமன்றத்தில் சரவணபவன் எம்.பி தனது கருத்துக்களை நேற்று முன்வைத்தார். இவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அபிவிருத்தி சம்பந்தமாக சந்தேகத்தைக் கிளப்பினார். யுத்தம் நடைபெற்ற காலம் தொட்டு இன்றுவரை வடமாகாண தமிழ் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முழுமையான முறையிலே சேவையாற்றி வருகின்றார். இவரை விமர்சிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உரிமை இல்லை என்பதே எனது கருத்தாகும். இன்று வட பகுதி மக்களின் அபிவிருத்தியை பேரினவாதிகளின் மத்தியிலும் கூட நேர்மையான முறையிலே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்துச் செல்கின்றார். இதனை சரவணபவன் எம்.பியும் தமிழ் தேசிய கூட்டமைப்பனரும் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் வடபகுதி மக்களின் குறைநிறைகளை எடுத்துச் சொல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உரிமை உள்ளது. அவர்களது பாராளுமன்ற உரைக்கு பதிலளிப்பதற்கு எவருக்கும் நேரம் ஒதுக்கப்படுகின்றது. இருப்பினும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேசும் பொழுது அவர்களை இடைமறித்து கேவலமாக பேசுவதை அஸ்வர் எம்.பி. நிறுத்த வேண்டும். அதிகமாக சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து சபையை முன்னெடுத்துச் செல்லும் அஸ்வர் இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட கூடாது. இவர் எதிர்கட்சிக்கு மட்டுமல்ல ஆளுங்கட்சியான எங்களுக்கும் ஒரு தொல்லையாக தென்படுகின்றார். ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கெதிராக இவர் செயல்படுவதை பற்றி நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினருக்கெதிராக அநாவசியமான இவரது தலையீடு கேவலத்திற்குரியதாகும். இதன் மூலம் இவர் எவரைத் திருப்தி செய்து எதனைப் பெற்றுக் கொள்ளப் பார்க்கின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். அரச தரப்பு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரைப்பற்றி தெரிந்து கொண்டும் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற நிலையில் உள்ளார்கள். இவரது இப்படியான நடிவடிக்கைகளை சபாநாயகர் இனியும் அனுமதிப்பது ஜனநாயக விரோத செயலாகும். சகல இன மக்களும் இணைந்த ஐக்கிய இலங்கை என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டை இவரது நாடாளுமன்ற செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கின்றது" என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’